ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “அரசின் பரிந்துரையின்பேரில், 2026 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள், ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக 2026 ஜூலை 20 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, மே வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா மற்றும் தற்போதைய வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (எப்சிஆர்ஏ) திருத்த மசோதா உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.