ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணை

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் நடத்தும் வீடீயோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை…

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் மீது தாக்குதல் நடத்தும் வீடீயோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்று கொண்டிருந்த ஜப்பானிய இளம்பெண்னின் தலையில் சிலர் முட்டையை உடைத்தும் கலர்பொடிகளை பூசியும் தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஜப்பான் பெண் தாக்கப்பட்டது குறித்து புகார் ஏதுவும் வரவில்லை என்றும் வீடியோவில் உள்ள நபர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/iramsubramanian/status/1634045266591399937

இந்த சம்பவம் தொடர்பாக பலர் கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில்  தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் விரிவான அறிக்கையை ஆணையத்திடம் டெல்லி போலீசார் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.