கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தூத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு.
வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அன்றாடச் செய்தியாகிக்கொண்டிருக்கிறது. சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது?
பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




