கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் இசையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் டச்சுக்காரர்களால் உருவாக்கப்பட்ட கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டையை தொல்லியல்துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கமலஹாசனின் இந்தியன் 2 படிப்பிடிப்பு கடந்த மூன்று தினங்களாக இந்த கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில், கமலஹாசன் பங்கேற்கும் முக்கிய சண்டை
காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மற்ற நடிகர்களை வைத்து ஒரு சில காட்சிகள் இறுதி கட்டமாக எடுக்கப்பட்டது.
இறுதி நாள் படப்பிடிப்பு என்பதால் கிராம மக்கள் சார்பில் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு
படப்பிடிப்பு குழுவினரிடம் நன்கொடை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்
படப்பிடிப்பு குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே டச்சுக்கோட்டை நுழைவு வாயிலை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு
பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அங்கு வந்து கிராம மக்களிடமும் படபிடிப்பு குழுவினரிடமும் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் டச்சு கோட்டை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
– யாழன்