அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காரி மோதியதில் சிவயாழினி என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்.
விபத்தை ஏற்படுத்திய நபர் பள்ளி நிர்வாகத்தோடு தொடர்புள்ளவர் என்பதால், குழந்தை உயிரிழந்த செய்தி கூட பெற்றோருக்கு தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தியதாக செய்திகள் வருகின்றன.
விபத்தை ஏற்படுத்திய நபர் உட்பட இந்த பெருந்தவறில் தொடர்புள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், திமுக அரசு இருந்தபோது மெத்தனமாக செயல்பட்டதை போல் அல்லாமல், உறவினர்களின் கோரிக்கையினை கேட்டறிந்து, தொடர்புள்ளோர் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையை வலியுறுத்துகிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







