தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த ஏழு மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.







