தஞ்சையில் ஆகஸ்ட் 3ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வரும் 3ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல் என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத தவெக அரசு!

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி தவெக அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.