கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர், மண்மங்கலம் அடுத்துள்ள செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள அவரது பூர்வீக வீடு, தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி வீடு,
திமுக தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன் வீடு, கோதைநகர் பகுதியில் அமைந்துள்ள அதிபர் ரமேஷ் வீடு என இடங்களில் ஐந்து குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.




