தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




