“அண்ணாமலை பேசுவது வடிவேலு காமெடி போல் உள்ளது” – மாணிக்கம் தாகூர்

அண்ணாமலை பேசுவது கொண்டையை மறந்துட்டீங்க என்ற வடிவேலு காமெடி போல் உள்ளது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, பாகலூர் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் சின்னசாமி என்பவரது இளைய மகன் வெற்றியானந்தம்(20) மூன்று ஆண்டுகளாக நீட்தேர்விற்கு பயிற்சி பெற்று,மூன்று தேர்விலும் தோல்வியடைந்த நிலையில், கடந்த மாதம் நீட்தேர்வுக்கு முந்தைய நாள் வெற்றியானந்தம் மனஅழுத்தத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்ட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் வெற்றியானந்தம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட்தேர்வு ரத்து ஆனதால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினரை சந்தித்தோம். 2 நாட்களாக இந்தாண்டு நீட்தேர்வினால் தற்கொலை செய்துக்கொண்ட 4 பேரின் குடும்பத்தை சந்தித்து வருகிறோம். நீட்தேர்வால் இதுவரை 34 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். நீட்தேர்வு வினாத்தாள் கசிவால் பாதிப்புக்கள் உள்ளன. நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. ஒசூரில் இறந்த மாணவனின் பெற்றோர்களின் கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.

அண்ணாமலை புதிய அமைப்பு தொடங்குவது பிரச்சனை இல்லை, அவர் எங்களுக்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லாதது போல பேசுகிறார். வடிவேல் காமெடி போல கொண்டைய மறந்துட்டீங்க என்பது போல உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.