“முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு” – எடப்பாடி பழனிசாமி!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கப்பட்டு சுமார் ஆறு மாத காலம் ஆகிவிட்டது. ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. ஆனால் அதை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதற்குப் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழிக்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் 2011 சட்டமன்ற பொது தேர்தலில் இது போன்ற கடுமையான மின்வெட்டு இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி தடையில்லா மின்சாரத்தை வழங்கினோம்.

2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11.50 காசுகளுக்கு வாங்கப்பட்டது. மின் கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு ஆட்சி மாற்றம் செய்யப்பட்டு 2026 ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்தார். தவெக ஆட்சியில்
சுமார் 80 சதவீதம் மீன் கொள்முதல், அதிகமான விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

மேலும் மின் பற்றாக்குறைக்கு தினம் 41 ரூபாய்க்கு 50 பைசாவிற்கு மின்சாரம் வாங்க உள்ளதாக தகவல் வெளியானது அதனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரூ.41.50 பைசாவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்படுவதாக இருந்தால் எப்படிப்பட்ட ஊழல் இந்த மின்சார துறையில் நடைபெற்று இருக்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டும். புழல் சிறையில் 20 நாட்களுக்கு முன்பு சென்று பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின் புழல் சிறையில் இருந்து சிலர் தப்பினர். பிறகு தேனி மாவட்டத்தில் இருந்து 17 பேர் சிறையில் இருந்து தப்பியுள்ளனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கொலை சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது, அலுவலர் போல சட்டமன்றத்திற்கு செல்கிறார். சனி, ஞாயிறு வீட்டில் இருக்கிறார் முதலமைச்சர். தமிழக முதலமைச்சர் விஜய் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு சென்றாள் அடுத்த நாள் காலையில் தான் அதிகாரிகளை சந்திக்கிறார்
முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு.

ஒரு கிலோ அரிசி சுமார் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. பருப்பு 14 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மளிகை சாமான்கள் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தீபாவளி முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பதாக பரவலான தகவல் வந்தது. கடந்த கால ஆட்சியை விட கட்டுமான பொருட்களின் விலையை தற்பொழுது உள்ள ஆட்சியில் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு டன் தார் கடந்த ஆட்சியில் 50 ஆயிரம், இப்பொழுது ஒரு லட்ச ரூபாய் 100% உயர்த்தப்பட்டுள்ளது. ஜல்லி ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்துள்ளது. எம் சாண்ட் 1500 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சியில் உண்மைத் தன்மை இல்லை, நிர்வாக திறன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.