சமந்தா நடிப்பில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. அவரே தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இந்த படத்துக்கு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது.
இந்த நிலையில் ‘மா இன்டி பங்காரம்’ உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘தெலுங்கில் கதாநாயகியை மையமாக கொண்டு வெளியாகி 100 கோடி வசூல் செய்த முதல் படம் ‘மா இண்டி பங்காரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




