தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடா்பான முன்மொழிவுகள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்தார். இதனை தொடர்ந்து மக்களுக்கு என்ன தேவையோ அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.




