நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் இல்லை என அண்ணாமலை நிரூபித்துள்ளார் -சீமான்!

நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் இல்லை என அண்ணாமலை  நிரூபித்துள்ளார் என சீமான் தெரிவித்துள்ளார்.  தென்காசியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து மைக் சின்னத்தில் அக்கட்சியின் தலைமை…

நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் இல்லை என அண்ணாமலை  நிரூபித்துள்ளார் என சீமான் தெரிவித்துள்ளார். 

தென்காசியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து மைக்
சின்னத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது சீமான் பேசியதாவது:

100 நாள் வேலைத்திட்டம் வாயிலாக மத்திய அரசு மக்களைச் சோம்பேறியாக்குகிறது.
மேலும் இது இந்திய தேர்தல் இல்லை எனவும் மாறாக மாநிலங்களின் உரிமைகளைக்
காக்கக் கூடிய தேர்தலாக உள்ளது.  அந்த வகையில் ஒற்றை ஆட்சி முறை இருக்கக் கூடாது. திமுக,  அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழக மக்களின் உரிமைகளைப் பறிகொடுத்து விட்டது.

சாதி மதம் பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு செலுத்த வேண்டாம்.  அவ்வாறு செலுத்தினாலும் அந்த ஓட்டு தீட்டாக மாறும்.  நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தைப் பறித்து விட்டால் தங்களை வீழ்த்தி விடலாம் என்று எண்ணும் பாரதிய ஜனதா கட்சியும்,  அதன் மாநில தலைவருமான அண்ணாமலை மறைமுகமாகத் தனது வெற்றிக்குப் பாடுபட்டு வருகின்றனர்.

 

அதுமட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சியை என்.ஐ.ஏ சோதனை மூலம் உலகத் தரத்திற்கு
உயரத்தில் உள்ளார்.  அதுமட்டும் இல்லாது,  விவசாய சின்னத்தைப் பறித்து நாம் தமிழர் கட்சியைப் பாரதிய ஜனதாவின் B டீம் இல்லை என நிரூபித்துள்ளார்.  அந்த வகையில் சீமானை மிகப்பெரிய தலைவனாக்க பாஜகவிலிருந்து அண்ணாமலை போராடிக் கொண்டிருக்கிறார். அ தற்குத் தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.