முக்கியச் செய்திகள் இந்தியா

மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனகாபள்ளியில்மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை திடீரென தூண்கள் இடிந்து விழுந்ததால் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது இதில் இரண்டு கார்கள், லாரி அப்பளமாக நொறுங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த சத்தத்துடன் மேம்பாலம் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் பொதுமக்கள் ஆகியோர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இடிபாடுகளை அகற்றி வாகனங்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’4 முறை தள்ளி வைத்தும் முடியலை..’ ஓடிடி-யில் வெளியாகிறது பிரமாண்ட வரலாற்றுப் படம்

Halley Karthik

தமிழ்நாடு காவல் துறையில் அடுத்தடுத்து அரங்கேறிய துயர சம்பவம்

G SaravanaKumar

அதர்வாவுக்கு கை கொடுத்ததா ட்ரிகர்? – விமர்சனம்

EZHILARASAN D