முக்கியச் செய்திகள் இந்தியா

கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த புதிய அமைச்சகம்

விரிவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த புதிய அமைச்சகம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகமானது தனி நிர்வாக சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்கி நாடு முழுவதும் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும். இந்த அமைச்சகத்தின் அமைச்சராக யார் பதவியேற்கிறார் என்பது இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கவும், தொழில் புரிவதற்கான தடைகளை களைந்தெறியவும் இந்த அமைச்சகம் செயல்படும். மத்திய நிதியமைச்சகம் வெளியிடும் அறிவிப்புகளை நிறைவேற்றுவதற்கும் இந்த அமைச்சகம் உறுதியுடன் செயல்படும் என சொல்லப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் விரிவாக்கப்பட்ட அமைச்சரவையினுடைய  ஒரு பகுதியாக இந்த புதிய அமைச்சகம் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

ட்விட்டர் பக்கத்தை நிரப்பும் செல்வராகவனின் தத்துவ ட்வீட்கள்

Saravana Kumar

திமுகவிற்கு நடிகை விந்தியா சவால்!

Jeba Arul Robinson

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்வது எப்போது?

Halley Karthik