கொரோனா 2ம் அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் – வெளியுறவு அமைச்சர்

கொரோனா 2வது அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலாவது இந்தோ-பசிபிக் வணிக உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர்…

கொரோனா 2வது அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்தோ-பசிபிக் வணிக உச்சி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கலந்துகொண்டார். இதில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், மொரிசியஸ் வெளியுறவு அமைச்சர் ஆலன் கானூ, பிரான்ஸ் அமைச்சர் டெலகேட், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிஸ் பெய்ன் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய உலக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார். மேலும், இந்தோ-பசிபிக் நாடுகள், டிஜிட்டல் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரம், 2ம் அலை பரவல் முடிந்த பிறகு வலிமையாக மீட்சிப்பெற்று வளர்ச்சி பாதைக்கு திரும்பும் எனவும் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.