முக்கியச் செய்திகள் தமிழகம்

தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி மனைவியை காப்பாற்றும் முதியவர்!

வறுமையையும், வயது மூப்பையும் ஒரு தடையாக கருதாமல், தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி கரம் பிடித்த மனைவியை காப்பாற்றி வருகிறார் 90 வயது முதியவர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள காரியாண்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைபாண்டி. 90 வயதான இவர்,  தனது 12வது வயதிலேயே பனை மரம் ஏற கற்றுக்கொண்டுள்ளார். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், தனது 80 வயது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் துரைபாண்டி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பனை மரம் ஏறும் முதியவர்

பனை மரம் ஏறி பதநீர் இறக்கி, கருப்பட்டி தயார் செய்து விற்பது, நுங்கு, பனங்கிழங்கு விற்பனை செய்வதே அவரது அன்றாட வேலையாக இருந்து வருகிறது. பனை தொழில் 3 மாதம் மட்டுமே கை கொடுப்பதால் முன்பெல்லாம் மற்ற மாதங்களில் மும்பைக்கு சென்று கூலி வேலை செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

வயதான காலத்தில் துரைபாண்டியையும், அவரது மனைவி வேலம்மாளையும் பிள்ளைகள் கைவிட்ட சூழ்நிலையில், பனையே தமக்கு கதி என மீண்டும் பனை ஏறும் தொழிலில் களம் இறங்கியுள்ளார்.

அரசு உதவி செய்ய கோரிக்கை

யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் பதநீர் இறக்கியும், நொங்குகளை வெட்டி விற்பனை செய்தும் மனைவியை காப்பாற்றி வருகிறார் துரைபாண்டி. இதுகுறித்து அவர் கூறுகையில், முன் காலத்தில் ஒரே நாளில் 25 பனை மரங்கள் வரை அசால்ட்டாக ஏறிவந்தேன். இன்று 2,3 பனை மரங்கள் மட்டுமே ஏற முடிகிறது. மேலும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயார் செய்யவும் ஆட்கள் இல்லாததால் குறைந்தளவு பதநீரே இறக்குவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தனது காலத்திற்கு பின் மனைவியை யார் காப்பாற்றுவார்களோ என வேதனை தெரிவிக்கும் அவர், அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தற்போதெல்லாம் 40 வயதிற்குள்ளாகவே அனைத்து நோய்களும் வந்து முடங்கி விடுகின்றனர். ஆனால் கூன் விழுந்த முதுகுடன், தள்ளாத 90 வயதிலும் அயராமல் சுறு,சுறுப்புடன் பனை மரம் ஏறும் துரைபாண்டி நமது இளைய சமுதாயத்தினருக்கு ரோல்மாடல் என்றால் அது மிகையாகாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிபிஎம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Halley Karthik

காதலியுடன் எடுத்த புகைப்படத்தை ஊர் முழுவதும் போஸ்டராக ஒட்டிய இளைஞர்

Arivazhagan CM

வீடுதோறும் காய்ச்சல் கண்காணிப்பு பணி திவீரப்படுத்தப்படும்: சென்னை ஆணையர் பிரகாஷ்