10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி

கேரளாவில் 10 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், சிறுவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.   கேரள மாநிலம் காசர்கோடு அருகே மஞ்சேஸ்வரம் பகுதி உள்ளது. இங்கு உயரமான வளைவுகள் இருப்பதால், வாகன…

கேரளாவில் 10 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், சிறுவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

 

கேரள மாநிலம் காசர்கோடு அருகே மஞ்சேஸ்வரம் பகுதி உள்ளது. இங்கு உயரமான வளைவுகள் இருப்பதால், வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கவனமாக கடந்து செல்லவேண்டியுள்ளது. இந்நிலையில், இந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாலையோரம் தடுப்பு கம்பிகள் இல்லாததால் ஏற்பட்ட இந்த விபத்தில், சிறுவர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே, ஆட்டோ நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தபோது, அங்குள்ள வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் விபத்து காட்சிகள் பதிவாகியுள்ளன.

 

அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆட்டோ நிலைதடுமாறி பள்ளத்தில் விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.