நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் நாளையும் விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராகுல் காந்தி, கடந்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானார்.
அவர் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
எனினும், தனது தாயாரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அமலாக்கத்துறை ஏற்றுக்கொண்டதை அடுத்து இன்று அவர் விசாரணையில் ஆஜரானார்.
4 நாட்கள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
வரும் 23ம் தேதி விசாரணையில் ஆஜராகுமாறு அவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.









