புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குட்கா, புகையிலை பொருட்களுக்கான தடை உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, புகையிலை பொருட்கள் தடை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.







