தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து இதுவரை தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அளித்த தேனீர் விருந்தில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் சுதந்திரப்போராட்ட தியாகிகள் பங்கேற்றனர். அதில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” மோசமான வானிலை காரணமாக விமானம் சரியான நேரத்தில் தரையிரங்க முடியவில்லை, கால தாமதத்திற்கு மன்னிப்பு கோறுகிறேன். தெலங்கானா தலைமை செயலகம் திறப்பு விழா குறித்து இதுவரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
தெலங்கானாவில் உள்ள அதிகாரிகள் குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்காததை குறித்து நானே நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நான் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அவர்களுக்கு அங்குள்ள ஆளும் அரசு கொடுத்த அறிவுறுத்தலின்படியே அவர்கள் பங்கேற்கவில்லை.
தெலங்கானாவில் புறக்கணிப்பு என்பது பழக்கமாகிவிட்டது. யாரின் உரிமை மறுக்கப்பட்டாலும் அதை நீதிமன்றத்தில் முறையிட்டு நீதி பெறலாம் என்ற அம்பேத்காரின் அரசியலமைப்பு சட்டத்தின்படி தெலங்கானாவில் குடியரசு தினவிழாவில் பங்கேற்றேன். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திவிட்டு வந்தேன்.
அரசியலமைப்பு சட்டமீறலை தெலங்கானா அரசு செய்துள்ளது அதை தமிழகத்தில் உள்ள சில பத்திரிக்கைகள் பாராட்டுகின்றது. மாத மாதம் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவேன் அதில் இதைப்பற்றி குறிப்பிடுவேன்.” என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் தமிழிசை செளந்தரராஜன் அளித்த தேனீர் விருந்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– யாழன்