அம்மா உணவகம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிமுக – திமுக உறுப்பினர்களிடயே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கழிவறை இல்லை. பல அம்மா
உணவகங்கள் தற்போது முறையாக செயல்படுத்தப்படவில்லை. மூடப்பட்ட அம்மா உணவகங்கள் எவ்வளவு என 145-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் சென்னை மாமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அம்மா உணவகம் அமைக்கப்பட்டபோது இருந்தே கழிவறை இல்லை என திமுக
உறுப்பினர்கள் தெரிவிக்க அதிமுக உறுப்பினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அம்மா உணவகப் பணியாளர்களுக்கு கழிவறை அமைப்பது தொடர்பாக வசதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா பதில் அளித்தார்.
மாமன்றக் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக 145-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன், அம்மா ஆட்சியில் 200 அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்தினார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அம்மா உணவகத்தில் தொடர்ந்து
சிறப்பாக செயல்படுத்தினார். கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகம் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் பெரிதும் பலன் அளித்துள்ளது. தற்போது அம்மா உணவகம் சீராக செயல்படுவதில்லை.
அம்மா உணவகம் குறித்து மாமன்றத்தில் பேசினால் திமுக மாமன்ற உறுப்பினர்கள்
எங்களைக் கேலி செய்து எங்களைப் பேச அனுமதிக்க மறுக்கின்றனர். அதிமுகவில் 15 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் மாமன்றக் கூட்டத்தில் எங்களுக்கு
நேரம் தராமல் பேச வாய்ப்பு அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
ஆளும் கட்சியினர் மிரட்டும் தொனியில் எங்களைப் பேச மறுக்கிறார்கள் என்றும்,
ஆளும்கட்சி துதி பாடி துதி புகழ்பாடும் செயல்களையே மாமன்றக் கூட்டத்தில்
செய்கின்றனர் என்றார்.