சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா

சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை, ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன் என அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற 6 ஆம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல்…

சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை, ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன் என அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 6 ஆம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் அதிமுகவுடன் பாஜக ,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ,ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். இந்நிலையில் இசக்கி சுப்பையா அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் ‘தனது சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்’ என வாக்குறுதி அளித்தார். அவருடன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.