தென்காசியில் ஆலங்குளம் தினசரி சந்தைப் பகுதி வியாபாரிகளிடம், பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளர் ஹரி நாடார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் போட்டியிடுகிறார்.
தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், ஆலங்குளம் காய்கறி சந்தை பகுதியில் இன்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். தான் வெற்றி பெற்றால் தொகுதியின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித்தருவதாக அவர் உறுதியளித்தார். அவருடன் கட்சி தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.







