தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தென்னை உற்பத்தியை அதிகரிக்க 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார்.…

தென்னை உற்பத்தியை அதிகரிக்க 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், வேரால் உண்ட நீரை தலையிலிருந்து தருகிற உன்னதம் கொண்டது தென்னை. வளர்ப்பவரை அன்னை போல பாதுகாக்கும் அரிய பயிர் தென்னை.

இதையும் படிக்கவும்: ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்

தமிழ்நாட்டு சமையலில் தேங்காய்க்கு பெரும் பங்கு உண்டு இவ்வாறெல்லாம் தென்னையின் பலன் குறித்து பாராட்டி பேசிய அமைச்சர், தென்னையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக கூறினார்.தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும், தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில், வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்த செயல் விளக்கத் திடல்கள் பத்தாயிரம் ஹெக்டர்கள் பரப்பில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகளை தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறுநடவு – புத்தாக்கத் திட்டம் 20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

குட்டை –நெட்டை வீரிய ஒட்டு ரக தென்னைக்கு அதிக தேவை இருப்பதால், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்னை நாற்றுப் பண்ணைகளில் கூடுதலாக 10 ஆயிரம் குட்டை – நெட்டை வீரிய ஒட்டு ரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.