திடீரென கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள்!

வேதாரண்யத்தில் திடீரென பெய்த கோடை மழையால் உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீயில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சுற்றியுள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட…

வேதாரண்யத்தில் திடீரென பெய்த கோடை மழையால் உப்பளங்கள் முழுவதுமாக தண்ணீயில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சுற்றியுள்ள அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட எராளமான பகுதிகளில் உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பானது உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த உப்பு உற்பத்தியை நம்பியே உள்ளது.

இந்நிலையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக வேதாரண்யம் பகுதிகளில் உள்ள உப்பளங்களில் சுமார் 5 செ.மீ அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது, மேலும் உப்பு பாத்திகள் சேதமடைந்துள்ளதால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் ஒரு வார காலம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.