திருவள்ளூர்: தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி தொடக்கம்!

திருவள்ளூர் அருகே வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த ஆலையில், கடந்த ஜூன் 21ம் தேதி குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்து விபத்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதனிடையே அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றிய அசாம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதனைத்தொடர்ந்து இறால் தொழிற்சாலையில் உள்ள அமோனியா வாயுவை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக அமோனிய வாயுவை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 3 டேங்கரில் சேமித்து வைக்கப்பட்ட சுமார் 2 டன் அமோனியா வாயு பாதுகாப்பாக அகற்றப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.