முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் – சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி உறுதி

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழ்நாடு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையினருக்கு சிறுநீரக நோய் வராமல் தடுக்க TANKER அறக்கட்டளையுடன் இணைந்து நிதி திரட்டும் விதமாக 50 கிலோ மீட்டர் விழிப்புணர்வு முழு மாரத்தான் போட்டி நடைபெற்றது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இதன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி தொடங்கி வைத்து அவரும் மாரத்தானில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், Tanker அறக்கட்டளை மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் ரத்த அழுத்தமானியை பொறுத்தி, முழு மாரத்தான் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 15 லட்சம் நிதி திரட்டி உள்ளோம் என்றார்.தமிழ்நாட்டில் தற்போது வரை 550 காவல் நிலையங்களில் ரத்த அழுத்தமானி பொறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது. காத்திருப்பு பாட்டியலில் மட்டும் 6000 பேர் வரை கிட்னிக்காக காத்திருக்கின்றனர். ரத்த அழுத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்க்கை முறையை மாற்றினாலே மாற்றம் வரும் என கூறினார். மேலும் கடந்த 3 மாதங்களில் மட்டும் வெளி நாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 60 சிலைகளை கண்டறிந்துள்ளோம் என்றார்.10 சிலைகளை தமிழ்நாட்டிற்கு மீட்டு கொண்டுவந்துள்ளதாகவும், வெளிநாட்டிற்கு சென்று 1 மாதம் முயற்சி செய்ததால் கடத்தப்பட்ட சிலைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.கடத்தப்பட்ட சிலைகளின் மதிப்பு 90 ஆயிரம் டாலர் வரை இருக்கக்கூடும் என்றும், விரைவில் வெளிநாடு சென்று சிலைகளை மீட்டு எடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயந்த் முரளி தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரியலூர் மாணவி தற்கொலை; காரணமாகவர்களுக்கு கடும் தண்டனை வழங்குக-விஜயகாந்த்

Halley Karthik

அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!

EZHILARASAN D

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

Arivazhagan Chinnasamy