வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி.

தென்காசி அருகே பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தொல்.திருமாவளவன் எம்.பி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் மணி மண்டபத்தில் உள்ள…

தென்காசி அருகே பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தொல்.திருமாவளவன் எம்.பி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட்டமேசை மாநாடில் பங்கேற்று வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் தான் என குறிப்பிட்டார்.

 

மேலும் ஜாதிக்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வுரிமைக்காகவும், சனாதனத்தை எதிர்த்தும் முதன் முதலில் குரல் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன். வருகிற 28-ம் தேதி மதுரையிலும் அக்டோபர் 8-ம் தேதி கோவையிலும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், தோழமை கட்சிகளுடன் சேர்ந்து சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்கிற கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

https://twitter.com/thirumaofficial/status/1571383353575886849

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவர்கள் பெட்டி கடைகளில் மிட்டாய் வாங்க சென்றபோது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் உங்கள் ஊரை சார்ந்தவர்களுக்கு பொருள் தர மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இது போன்ற சமூகப் புறக்கணிப்பு என்பது பெரிய கொடுமை. பள்ளி பிள்ளைகள் மீது ஜாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இது குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை தவிர மற்ற வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற அவர், சனாதான எதிர்ப்பாளியாக பிரதமர் மோடி வந்தால் அவரை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என தெரிவித்தார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.