பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக மறைந்தார். அவர் இன்று காலை நடைபெயிற்சி செய்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாக்யராஜ் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73.
மறைந்த இயக்குநர் பாக்யராஜ் தனது தனித்துவமான கதையம்சம் மற்றும் நகைச்சுவை காரணமாக தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் பாக்யராஜ் நேற்று நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவாவில் நேற்று மாலை நடிகை குஷ்புவின் மகள் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாக்யராஜ் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மேடையேறி மணமக்களை வாழ்த்தினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.




