துணிவு படத்திற்காக பல சென்டிமெண்ட்களை விட்டு கொடுத்த அஜித்; அவரின் முடிவு கை கொடுக்குமா ?

துணிவு படத்திற்காக அஜித்,  விட்டு கொடுத்துள்ளார். அஜித் விட்டு கொடுத்த சென்டிமெண்ட்கள் அவருக்கு கை கொடுக்குமா என்பது பற்றி பார்க்கலாம்.. எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த…

துணிவு படத்திற்காக அஜித்,  விட்டு கொடுத்துள்ளார். அஜித் விட்டு கொடுத்த சென்டிமெண்ட்கள் அவருக்கு கை கொடுக்குமா என்பது பற்றி பார்க்கலாம்..

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித்குமார், ஹெச் வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொகைன், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மட்டும் அறிவிக்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில், துணிவு படம் வரும் 11-ந் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

துணிவு படத்தில் அஜித்தின் பல சென்டிமெண்ட்டுகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய சில படங்கள் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை என V வரிசையில் தலைப்புகள் இடம்பெற்று வந்த நிலையில், இந்த முறை துணிவு என்று தலைப்பு வைக்கப்பட்டது. அதே போல வியாழக்கிழமை சென்டிமெண்ட்டும் முறியடிக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விவேகம், விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட பல படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியானது. அந்த செண்டிமெண்டும் இந்த முறை முறியடிக்கப்பட்டு துணிவு படம் புதன்கிழமை வெளியாக உள்ளது.

துணிவு படத்தில் இடம் பெற்ற அஜித்தின் கெட்டப்புகள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்த நிலையில், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் வழக்கமான அஜித்தாக இல்லாமல் மாறுபட்ட அஜித்தை பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

துணிவு படத்திற்காக அஜித் விட்டு கொடுத்த சென்டிமெண்ட்கள் அவருக்கு கை கொடுக்குமா, ரசிகர்களின் நம்பிக்கையை வினோத் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.