முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்

தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை ஆயிஷா சுல்தானா, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று லட்சத்தீவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக, நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவின் கவராத்தி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா, தன் மீதான தேசத்துரோக வழக்குக்கு தடை கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தற்போது நடைபெற்று வரும் விசாரணை விவரங்களை, நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி லட்சத்தீவு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, லட்சத்தீவு போலீசார் விசாரணை தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர். அதில், ஆயிஷா, டிவி வாதத்தின் போது செல்போனில் வந்த மெசேஜை பார்த்தபிறகுதான் உயிரி ஆயுதம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.

அதை அனுப்பியது யார் என்ற விவரத்தை அவர் அழித்துவிட்டார். விசாரணைக்கும் ஆயிஷா ஒத்துழைக்கவில்லை. வழக்குக்கு தேவையான ஆவணங்களையும் அவர் கொடுக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஐரோப்பாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Halley karthi

பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம் வழங்கியது வாட்ஸ் அப்!

Jayapriya

நடிகைக்கு முத்தமிட்ட ஜெனிலியா கணவர்; வைரலாகும் வீடியோ

Saravana Kumar