முக்கியச் செய்திகள் இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய வகை ஏவுகணை

ராணுவ டேங்கர்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

சமீபத்தில் ஜம்மு&காஷ்மீரின் இந்திய விமானப்படை தளத்தின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுயசார்பு இந்தியா திட்டதின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ டேங்கர்களுக்கு எதிரான சிறிய வகை ஏவுகணை தற்போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் “இந்த சிறிய வகை ஏவுகணையானது எதிரியின் ராணுவ டேங்கர்களை துல்லியமாக தாக்கும் வல்லமைகொண்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறைந்த எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையும் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பரிசோதனைகளும் வெற்றியடைந்துள்ளன என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகாஷ் ஏவுகணை ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு புதிய ஏவுகணைகள் மூலம் ராணுவத்தின் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சொந்த இடத்தில் வீடு கட்டியவரை அடித்துக்கொன்ற நபர்கள்!

Jeba Arul Robinson

தாப்பாத்தி இலங்கை அகதி முகாமில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி!

Vandhana

கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை