முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் தொடர்புள்ளவர்களை கண்டறிந்த டெல்லி போலீஸ்

குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பாகிஸ்தான் தீவிரவாத கும்பலுடன் தொடர்புள்ளவர்களை டெல்லி போலீசார் கண்டறிந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி காவல்துறை அதிரடி சோதனை நடத்தியதில் ஜெகஜீத் சிங் மற்றும் நெளஷாத் ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்பு இவர்கள் இருவரும், ஒருவரை துண்டு துண்டாக வெட்டி அதை வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறை கண்டறிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக காவல்துறை விசாரித்தபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி தங்கியிருந்த பகுதிக்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது. இவர்களை காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் இருந்த தொடர்பு குறித்து தெரியவந்துள்ளது.

ஜக்காவுக்கு கனடாவை சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாகவும் நெளஷத்துக்கு ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் உத்தரகாண்டின் அடையாளம் தெரியாத கண்டறியப்படாத இடத்தில் இருந்து ஆயுதங்களை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட இருக்கும் சூழலில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தியும் வாகனங்களை சோதனை செய்தும் வருகிறது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பில்கேட்ஸ்!

Web Editor

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Jayapriya

படப்பிடிப்பின் போது விபத்து; நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம்!

Arivazhagan Chinnasamy