2024 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- அமித்ஷா

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2…

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் டெல்லி நடைபெற்றது. இதில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான், மிசோராம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆகிய 9 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
செயற்குழு கூட்டதிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நாட்டாவின் பதவி காலம் 2024 ஜூன் மாதம் வரை நீடிக்கப்படுவதாக செயற்குழு கூட்டதில் ஒருமனதாக முடிவு செய்யபட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் மோடி மற்றும் நட்டா தலைமையில் பா.ஜ.க இன்னும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வழி நடத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.