ஆடிப்பெருக்கு : மதுரை அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித தீர்த்தமாடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மதுரை அழகர்கோயில் உள்ள  நூபுரகங்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித தீர்த்தமாடினர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில், இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை முதலே தென்மாவட்ட மக்கள் அதிகளவு அழகர்மலை மீது…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, மதுரை அழகர்கோயில் உள்ள  நூபுரகங்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித தீர்த்தமாடினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில், இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு காலை முதலே தென்மாவட்ட மக்கள் அதிகளவு அழகர்மலை மீது உள்ள நூபுர கங்கையில் தீர்த்தமாட வந்துகொண்டு இருக்கின்றனர்.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ம் நாள் ஆடிப்பெருக்கையொட்டி அழகர்மலை மீதுள்ள
கள்ளழகர் கோயில், பழமுதிற்சோலை முருகன் கோயில், ராக்காயி அம்மன் மற்றும்
பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில்களில் விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இன்று அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் அழகர் கோயிலுக்கு வரதொடங்கினர்

மேலும் இந்த ஆடிப்பெருக்கையொட்டி மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம்,தேனி
உள்ளிட்ட தென்மாவட்டத்தை பகுதிகலிருந்தும் ஏராளமான பக்தர்கள் முக்கியமாக
தீர்த்தமாக விளங்கக்கூடிய அழகர்மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில்
தீர்த்தமாடினர்.  மேலும் அந்த நூபுர கங்கை தீர்த்தத்தை பிடித்து செல்லும்
பொதுமக்கள் இன்று ஆடிபெருக்கு என்பதால் தங்களது வயல்வெளியில் தெளித்து விவசாய பணிகளை மேற்கொள்வதும் மற்றும் தன் சொந்த குலதெய்வங்கள் தீர்த்தக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்வதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் வருடத்திற்கு ஒருமுறை தன் இஷ்ட தெய்வங்களுக்கு மாலை போடும் பக்தர்கள் இந்த நூபுரகங்கையில் குளித்துவிட்டு விரதம் மட்டும் பாதையாத்திரை செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக அதிகாலை முதலே மாவட்ட காவல்துறையினர் அழகர்கோவிலில் அதிகளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல ஈரோடு மாவட்டம் பவானி நகரில் மையப்பகுதி அமைந்துள்ள தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் கூடுதுறையில் காவிரி ஆறு.,பவானி ஆறு.,மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாகும்.. இங்கு ஆடி அமாவாசை,ஆடிப்பெருக்கு உள்ளிட்ட தினங்களில் பக்தர்கள் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் மேலும் ஆடிப்பெருக்கு இன்று அதிக அளவில் திருமணமான புதுமன தம்பதியினர் காவிரி நீரில் புனித நீராடி தாலி மாற்றுவது வழக்கம்.‌

இந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானியில் இருந்து மேட்டூர் வரை செல்லக்கூடிய காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் ஏராளமானோர் முளைப்பாரி விட்டும் மஞ்சள் குங்குமம் வைத்தும் காவிரி ஆற்றில் குளித்து சிறப்பு வழிபாடு செய்தனர் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.