சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸை விளையாடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
அண்மைச் செய்தி: தமிழ்நாடு மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மொத்தம் 252 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார். அனில் கும்ப்ளே 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனையை படைத்தார். ஹர்பஜன் சிங் 61 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார்.
இதற்கு அடுத்ததாக கபில்தேவ் 65 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஜடேஜா 61 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 250 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் 2வது வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.