வகுப்புக்கு மாணவர்கள் வராத சம்பவம் குறித்து பேராசிரியர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இவரது ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மினசொட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோசப் முல்லின்ஸ். இவர் வழக்கம்போல் தனது வகுப்பறைக்குள் நுழைந்துள்ளார். ஆனால் வகுப்பறை காலியாக இருந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியான ஜோசப் முல்லின்ஸ் தன் வகுப்புக்கு எந்த ஒரு மாணவரும் வரவில்லை என்பதை உணர்ந்து மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தார். அவரது வகுப்பை சார்ந்த 40 மாணவர்களுக்கும் மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் அவர் அனுப்பிய மின்னஞ்சலுக்கு வந்த பதில் மிகவும் வேடிக்கையாக அமைந்தது. இது குறித்து ஜோசப் முல்லின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று, காலை 8.15 வகுப்புக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை, சுமார் 40 மாணவர்கள் கொண்ட வகுப்பறை காலியாக இருந்தது. அவர்களுக்கு முன்னஞ்சல் அனுப்பினேன். 2 நிமிடங்களுக்கு பிறகு அந்த மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. அந்த பதிலில், “ பேராசிரியர் நீங்கள் தவறான அறையில் இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ’தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை’ – கர்நாடக வனத்துறை விளக்கம்
இவரது இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.