தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி-மீன் கடைகள் போன்ற அத்திவாசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நியாய விலைக்கடைகள் மட்டும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களை நியாய விலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் பணி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.







