முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

புதிய லுக்கில் நடிகர் விக்ரம் – தங்கலான் அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் புதிய லுக்கில் படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம்  பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 61வது படத்திற்கு “தங்கலான்” என பெயரிட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோலார் தங்க சுரங்கத்தினை  மையமாக வைத்து கதைக் களம்  உருவாகி வரும் இந்த படத்தை கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகும்.  இந்த படத்தை  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதனையும் படியுங்கள்: தளபதி பாடலுக்கு கிடாருடன் நடனம் ஆடிய தல தோனி..!

தங்கலான் என்றால் ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பற்றிதான் இந்த படம் பேசுகிறது என டீசர் வெளியானபோது சினிமா விமர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதல்  முறையாக விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தில் இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளதாக படக்குழு கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்கலான் படத்தின் கதாநாயகன் நடிகர் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய லுக்கில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “Perfectly Imperfect” என எழுதி தங்கலான் என பதிவிட்டுள்ளார்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“காங். பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயன்றது”- நிர்மலா சீதாராமன்

Halley Karthik

“இளைஞர்களுக்குத் தேவைப்படும் stress buster மது அல்ல”- காவல் ஆணையர் ரவி

G SaravanaKumar

உலக்கோப்பை கால்பந்து: இன்று நடைபெறும் ஆட்டங்கள்

G SaravanaKumar