முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

தளபதி பாடலுக்கு கிடாருடன் நடனம் ஆடிய தல தோனி..!

விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற “ஜாலிலோ ஜிம்கானா” பாடலுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கிடாருடன் நடனம் ஆடும் வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் போட்டி வரும் மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக இந்த மாதத்தின் தொடக்கத்தில் சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர்தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கேப்டன் தோனி , ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, சுப்ரன்ஷூ சேனாபதி உள்ளிட்ட வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனையும் படியுங்கள்: மகளிர் பிரீமியர் லீக்: முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி!

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில்  கையில் கிடாருடன் தோனி மற்றும் சக அணி வீரர்களான ஷிவம் தூபே, தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நடனமாடினர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள “ஜாலிலோ ஜிம்கானா” பாடலுக்கு கிடார் வாசித்துக் கொண்டே  தோனி நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த விடீயோவுக்கு “ தல தோனி ஜாலி மூடில் உள்ளார்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan

சிவாவை உதயநிதியிடம் மாட்டிவிட்ட இயக்குநர்!

Vel Prasanth

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

EZHILARASAN D