முக்கியச் செய்திகள் இந்தியா

வயிற்றுக்குள் 56 பிளேடுகளா? – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், சன்சோர் மாவட்டம், டட்டா கிராமத்தில் வசித்து வருபவர் யாஷ்பல் சிங் (26). அக்கவுண்டன்டான யாஷ்பல் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் இருந்தபோது யாஷ்பல் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்கள் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் யாஷ்பலை அனுமதித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: புதிய லுக்கில் நடிகர் விக்ரம் – தங்கலான் அப்டேட்

அங்கு, முதலில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, யாஷ்பலின் வயிற்றில் ஏதோ உலோகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சோனோகிராஃபி மற்றும் எண்டோஸ்கோபி சோதனை மேற்கொண்டதன் மூலம் யாஷ்பலின் வயிற்றில் பிளேடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக யாஷ்பலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது வயிற்றில் இருந்த அனைத்து பிளேடுகளும் அகற்றப்பட்டன.

இதுகுறித்து மருத்துவர் நார்சி ராம் கூறுகையில், “யாஷ்பல் தற்போது நலமாக இருக்கிறார். பிளேடுகளை பேப்பர் கவரோடு சாப்பிட்டுள்ளார். பேப்பரோடு பிளேடை சாப்பிட்டதால் முதலில் வலி தெரியாமல் இருந்துள்ளது. அந்த பேப்பர் கரைந்ததால் வயிற்றில் அசவுகரியம் ஏற்பட்டு, ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். அத்தனை பிளேடுகளையும் இரண்டாக உடைத்தே பேப்பரோடு யாஷ்பல் சாப்பிட்டிருக்கிறார்” என்றார்.

யாஷ்பலின் உறவினரிடம் விசாரித்தபோது, “யாஷ்பலின் செயலில் எந்த மாற்றமும் இல்லை. அவர் வழக்கம்போலதான் இருந்தார். ஆனால், பிளேடுகளை ஏன் உட்கொண்டார் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

67 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவிலிருந்து திரும்பிய மூதாட்டி…கோபாலபுரம் இல்லத்தில் நெகிழ்ச்சி தருணங்கள்…

Web Editor

நீட் தேர்வு: 18.72 லட்சம் பேர் விண்ணப்பம்

Halley Karthik

அதிகரிக்கும் கொரோனா தொற்று: கேரளாவில் முழு ஊரடங்கு!

Halley Karthik