மத்திய அரசின் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த செலவினத் துறையின் ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் முறையானதா என்பதை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சுரேஷ் நாராயண் தனோர் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு மத்திய அமைச்சர் ஜிஜேந்திரசிங் பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், காலியான பணியிடங்களை நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயலாகும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணி ஓய்வு, பதவி உயர்வு, ராஜினமா உள்ளிட்ட காரணங்காளல் ஏற்படுகிறது.
இதையும் படிக்கவும்: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்!
மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி விரைவில் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்தார்.