அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருந்த திரைப்பட நடிகர் கார்த்திக் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக் (60) நடத்திவரும் மனித உரிமை காக்கும் கட்சி, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.







