இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான “அஸ்ட்ராஜெனெகா” தடுப்பூசியின் முதல் டோசை பிரதமர் போரிஸ் ஜான்சன் செலுத்திகொண்டார்.
இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனெகா என்ற கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மக்கள் செலுத்திக்கொள்ள முன்னுதாரணமாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொண்டார். முன்னதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் திவீர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தன்னுடைய சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை முதல் நபராக செலுத்திக்கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். 56 வயதான போரிஸ் ஜான்சன் தனது வீட்டின் அருகாமையில் உள்ள சைன்ட் தாமஸ் மருத்துவமனையில் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “நான் நிஜத்தில் நம்பவில்லை இது இவ்வளவு எளிதானது மற்றும் நல்லதென்று. ‘உங்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதேனும் அழைப்பு வந்தால் தயவு செய்து அதனை நிராகரித்துவிடாதீர்கள், உடனே சென்று தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நல்லது’ ஆளாக என்று கூறினார்.