முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்வது தொடர்பாக நேற்று அதிகாலைவரை ஆலோசனை நடைபெற்றது.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், நேற்றிரவு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் வருகை தந்தனர். அவர்களுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர், பாமக ஜி.கே மணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக தலைவர்கள், அதிகாலை வரை ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Related posts

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

Jeba

மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!

Nandhakumar

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Karthick