இந்தியாவில் கடந்த 112 நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் மிக அதிகமாக 43,846 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் 43,846 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களை ஒப்பிடுகையில் தொற்று எண்ணிக்கையானது தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் மொத்த 1.15 கோடிக்கும் அதிகமாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.11 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 3.09 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் சிகிச்சைப் பலன் இல்லாமல் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.59 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடக, குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா நாட்டில் வைரஸ் பரவலில் முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,126 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. ஒட்டுமொத்த நாட்டில் மகாராஷ்டிராவில் மட்டும் 62 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களில் ஒப்பிடுகையில் நேற்று மட்டும் உச்சபட்சமாக 700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் உட்பட நான்கு கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.