மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய திருவற்றியூர் எம்.எல்.ஏ மீது தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் மீது தமிழ்நாடு அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் கடந்த 26-ஆம் தேதி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் மீது அடியாட்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறையில் புகாரளிக்க விடாமல் அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து,சாலை போடும் ஊழியர்களை மிருகத்தனமாகத் தாக்கிய
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ @KPShankarMLA மற்றும் அவரது ஆதரவு ரவுடிகள் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் pic.twitter.com/umNbUuLx4y— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 29, 2022
இது தொடர்பான பத்திரிகைச் செய்தியை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் அராஜகம் பொதுவெளியில் தெரிந்த பின் கட்சி பதவியை மட்டும் பறித்திருப்பது திமுக அரசின் இரட்டை வேடத்தை காட்டுவதாக கூறியுள்ளார்.
அண்மைச் செய்தி: 2.35 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள பழனிசாமி, தமிழ்நாடு அரசு கண் துடைப்பு நடவடிக்கைகளை கைவிட்டு அவர் மீது
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மேலும், திமுக எம்.எல்.ஏ சங்கரிடமிருந்து திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழக செயலாளர் பதவி நேற்று பறிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







