மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைமை பதவிகளில் விசிக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி
நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தன.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக வேட்பு மணு தாக்கல் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கட்சிகள் அனைத்தும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டும், சில கட்சிகள் ஆலோசித்தும் வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோது கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் தலைமை பதவியை விசிகவிற்கு ஒதுக்கியதாக தெரிவித்த அவர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைமை பதவிகளில் விசிகவிற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறினார்.
மேலும், திமுக கூட்டணியில் விசிக போட்டியிட உள்ள இடங்கள் இன்று இறுதியாகும் என தகவல்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







